பா.ஜ.க.வின் நதி நீர் இணைப்பு அறிக்கை ! ரஜினி அமோக வரவேற்பு

0

நதிகள் இணைப்புக்கு தனி அமைச்சகம் அமையும் என பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பா.ஜ.க. தலைமையில் கூட்டணி அமைந்தால் முதல் வேலையாக நதிகளை இணைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

லைக்கா புரொடக்ஷனின் தயாரிப்பில், ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘தர்பார்’ படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியானது. இதையடுத்து செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், “நேற்று பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில் நதிகளை இணைப்போம் என்று தெரிவித்தனர். அப்படி நதிகளை இணைத்தால் நாட்டில் உள்ள வறுமை ஒழியும். விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்.

பா.ஜ.க. அடுத்து ஆட்சிக்கு வருமானால் நிச்சயமாக நதிகள் இணைப்பை முதலில் நிறைவேற்றும் என நம்புகின்றேன்” என்று தெரிவித்தார்.

இதேவேளை, கமலுக்கு ஆதரவு தெரிவிப்பீர்களா என்று கேட்டதற்கு, “என்னுடைய ஆதரவை தெரிவித்துவிட்டேன். மீண்டும் கேட்டு எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பைக் கெடுக்க வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.