பா.ஜ.க.வுக்கு ஏழை மக்கள் மீது கருணையே கிடையாது ! சீறும் சிதம்பரம்

0

பா.ஜ.க. அரசுக்கு ஏழை எளியவர்கள் மீது கருணையே கிடையாது என மத்திய முன்னாள் அமைச்சர் பா.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

சிவகங்கை மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் கார்திக் சிதம்பரத்தை ஆதரித்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், பா.ஜ.க. நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் நாங்கள் அறிவித்த மகத்தான நலத்திட்டங்களிற்கு எதிராக ஒரு திட்டங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. காரணம் பா.ஜ.க.விற்கு பரந்த மனப்பான்மை கிடையாது” என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இக்கூட்டத்தில் தமிழ் நாட்டு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.