பிரதமருக்கும் ஐதேக இன் முக்கிய உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு !

0

ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொருட்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பிரதமர் அலுவலக பிரதானி, துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க, காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க, கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேனாநாயக்க, கொழும்பு மாவட்ட முகாமையாளர் மற்றும் கட்சியின் செயற்குழு உறுப்பினர் லசந்த குணவர்தன, கொழும்பு மாவட்ட அமைச்சர் சுஜித் பிரசன்ன உள்ளடங்கலாக ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.