புதிய புகையிரத பாதை திறந்து வைப்பு

0

மாத்தறை முதல் பெலிஅத்த வரையிலான புதிய புகையிரத பாதை இன்று திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வு நேற்று ஆரம்பமானது.

இந்த திட்டத்திற்காக 278 மில்லியன் அமெரிக்க டெலர்கள் செலவிடப்பட்டுள்ளன. குறித்த புகையிரத பாதையில் 7 புகையிரதங்கள் பயணத்தை ஆரம்பிக்கின்றன. அவற்றுள் ஒரு புகையிரதம் காலி வரை பயணிப்பதுடன், நான்கு புகையிரதங்கள் மருதானை வரை பயணிக்கின்றன.

அத்துடன், இரண்டு புகையிரதங்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிற்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.