புறப்படவிருந்த விமானத்தை சில்லறை காசு எறிந்து நிறுத்திய மூதாட்டி!

0

சீனாவில் 66 வயதான மூதாட்டி ஒருவர் விமான இயந்திரத்தில் ஆறு நாணயக் குற்றிகளை வீசியதால் அந்த விமானச் சேவை பல மணிநேரம் நிறுத்தப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் மொங்கோலியாவின் Hohhot Baita அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று அந்தச் சம்பவம் நடந்தது.

66 வயது மூதாட்டி பின்னர் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டதாக, Tianjin Airlines நிறுவனம் தெரிவித்தது.

இது குறித்து மூதாட்டியிடம் விசாரணை மேற்கொண்டபோது விமானப் பயணம் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற வேண்டுதலுடன் கடவுளை வேண்டிக்கொண்டு 6 நாணயங்களை வீசியதை மூதாட்டி ஒப்புக்கொண்டார்.

இந்த விமானத்தில் 100 பயணிகள் இருந்ததுடன் மூதாட்டியை தடுத்துவைத்ததுடன் 2 மணி நேரங்கழித்து மற்ற பயணிகளுடன் அந்த விமானம் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.