புல்வாமா தாக்குதல் குறித்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தளபதி வெளியிட்ட கருத்தால் பரபரப்பு

0

புல்வாமா தாக்குதல் குறித்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தளபதி நிஷார் அகமது முன்கூட்டியே அறிந்து இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு இராஜியத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தளபதி நிஷார் அகமது, விசாரணையின் போது இவ்வாறு தெரிவித்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு முக்கிய கருத்தாவாக திகழ்ந்த பயங்கரவாதியான முதாசீர் கான், புல்வாமா தாக்குதலில் பங்கேற்க வருமாறு தனக்கு அழைப்பு விடுத்ததாக நிஷார் அகமது தந்த்ரே விசாரணையின் போது குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் தெரிவித்துள்ளதாக அந்த நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

குறித்த தகவலுக்கமைய, பாகிஸ்தானிலுள்ள ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தாலேயே புல்வாமாவில் தாக்குதல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டமை மற்றும் பயங்கரவாதியான முதாசீர் கான் தாக்குதலை நடத்தியமை மீண்டும் உறுதியாகியுள்ளதாக குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு புல்வாமாவின் லெத்போராவிலுள்ள துணை இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முக்கிய சதிகாரராக விளங்கிய நிஷார் அகமது தந்த்ரே, ஐக்கிய அரபு இராஜியத்திற்கு தப்பிச்சென்றார்.

அதனைத் தொடர்ந்து இந்திய அரசின் கோரிக்கையின் அடிப்படையில் அண்மையில் நிஷார் அகமதுவை, ஐக்கிய அரபு இராஜியம், நாடு கடத்தி இந்தியாவிடம் ஒப்படைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.