பெருந்தலைகளின் கருத்து மோதலில் சிக்கி சின்னாபின்னமாகும் ஐ.தே.கட்சி !

0

பொது வெளி­யில் கருத்து மோத­லில் ஈடு­ப­டு­வதை உடன் நிறுத்­து­மாஶ்ரீலங்காவின் அமைச்­சர்­க­ளான சஜித் பிரே­ம­தாச, ரவி கரு­ணா­நா­யக்க ஆகி­யோ­ருக்கு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பணிப்­புரை விடுத்­துள்­ளார் என்று அமைச்­சர் நவீன் திசா­நா­யக்க தெரி­வித்­தார்.

எனி­னும் நேற்று நடை­பெற்ற இரு­வேறு நிகழ்­வு­க­ளின் போது அமைச்­சர்­க­ளான சஜித்­தும், ரவி­யும் பரஸ்­பர கருத்­துக்­களை பகி­ரங்­க­மாக வெளி­யிட்­டி­ருந்­த­னர்.

அமைச்­சர் சஜித் பிரே­ம­தாச தெரி­விக்­கை­யில், எனக்கு அர­சி­யல்­வா­ரிசு கூட கிடை­யாது. நான் பரம்­ப­ரைக்­காக அர­சி­ய­லையோ அல்­லது தலை­மைத்­து­வத்­தி­னையோ எதிர்­பார்க்­க­வில்லை. நாட்­டின் எதிர்­கா­லம் கருதி இன, மத, மொழி, பேதம் கடந்து மக்­கள் சேவை ஆற்­று­வ­தற்கு தயா­ரா­கி­விட்­டேன். இத­னைக் கண்டு சிலர் அச்­சம் கொண்­டுள்­ள­னர்.

இத­னால் சஜித் பிரே­ம­தாச கட்­சிக்­குள் சூழ்ச்சி செய்­கின்­றார் என்று பரப்­புரை செய்­கின்­றார்­கள். இவ்­வா­றான கட்­டுக்­க­தை­க­ளைக் கேட்டு பொது­மக்­க­ளா­கிய நீங்­கள் ஏமாற்­றம் அடைந்­து­வி­டா­தீர்­கள். நான் ஒரு­போ­தும் எனது கட்­சி­யையோ அல்­லது எனது கட்­சி­யின் தலை­வ­ரையோ காட்­டிக்­கொ­டுக்­க­வில்லை.

71ஆவது தலைமை அமைச்­சர் பதவி கால­டி­யைத் தேடி­வந்­த­போ­து­கூட அது­வேண்­டாம் என்று நிரா­க­ரித்த நபர் தான் சஜித் பிரே­ம­தாச என்­பதை நினைவு படுத்த விரும்­பு­கின்­றேன்.

மேலும் தலைமை அமைச்­சர் பத­வியை விரும்­பா­த­தால் அதற்­கும் மேலான பத­வியை எதிர்­பார்­கின்­றேன் என்று அர்த்­தம் கொண்­டு­வி­ட­மு­டி­யாது. நான் அவ்­வா­றான உய­ரிய பத­வி­க­ளுக்­குச் செல்ல விரும்­பு­கின்­றேன்.

அதனை மக்­களே தீர்­மா­னிக்க வேண்­டும். அவர்­க­ளின் ஆணை­யு­டன் தான் அந்த பத­வி­களை வகிக்க விரும்­பு­கின்­றேன். குறுக்கு வழி­யில் சூழ்;ச்சி செய்து அந்த பத­வி­களை பெறு­வ­தற்கு நான் ஒரு­போ­தும் விரும்­ப­வில்லை. சூழ்ச்சி செய்­வ­தாக கட்­டுக்­க­தை­களை அவிழ்த்­து­வி­டு­ப­வர்­கள் நீண்ட ஆயு­ளு­டன் நிறை­வாக வாழ வெண்­டும் என்று வாழ்த்­து­கின்­றேன் – என்­றார்.

இதே­வேளை, பிறி­தொரு வைப­வத்­தின் பின்­னர் அமைச்­சர் ரவி கரு­ணா­நா­யக்க கருத்து வெளி­யி­டு­கை­யில்,

நாங்­கள் அர­சி­யல் அறி­வைக் கொண்­டி­ருக்­கின்­றோம். ஐக்­கிய தேசி­யக் கட்சி வெற்­றிப்­பா­தை­யில் கொண்­டு­செல்­வ­தற்­கான செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுத்­துக் கொண்­டிக்­கின்­றோம்.

அர­ச­த­லை­வர் வேட்­பா­ள­ரை­யும் மக்­கள் விரும்­பு­ப­வ­ரையே நிறுத்­து­வோம். வேட்­பா­ள­ராக வரு­வ­தற்கு ஆசைப்­ப­டு­ப­வர்­கள் தமது தரா­த­ரம் தொடர்­பில் சிந்­திக்க வேண்­டும். பொருத்­த­மா­ன­வர்­களா என்­பதை மறு­ப­ரி­சீ­லனை செய்­ய­வேண்­டும்.

பெயர் இருக்­கின்­றது என்­ப­தற்­காக எத­னை­யும் சாதித்து விட­மு­டி­யாது. உரிய வேட்­பா­ளரை உரிய நேரத்­தில் அறி­விப்­போம் – என்­றார்.
இதே­வேளை, அமைச்­சர் நவீன் திசா­நா­யக்க குறிப்­பி­டு­கை­யில்,

அமைச்­சர்­க­ளான ரவி கரு­ணா­நா­யக்­க­வும், சஜித் பிரே­ம­தா­ச­வும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் முக்­கி­யஸ்­தர்­கள். அவர்­க­ளுக்கு இடை­யில் சிறு பிரச்­சினை காணப்­ப­டு­கின்­றது என்­றால் அதனை பேசித்­தீர்த்­துக்­கொள்ள முடி­யும்.

பொது­வெ­ளி­யில் கருத்­துக்­களை தவிர்க்­கு­மாறு நேற்று (நேற்று முன்­தி­னம்) தலைமை ரணில் விக்­கி­ர­ம­சிங்க தொலை­பேசி ஊடாக அறி­வுரை வழங்­கி­யுள்­ளார். கட்­சிக்­குள் நாம் இந்த விட­யங்­களை பேசி முற்­றுப்­புள்ளி வைப்­போம் – என்­றார்.

Leave A Reply

Your email address will not be published.