பொலேரென அறைந்த இன்ஸ்பெக்டர்… 70 வயது தி.மு.க. பிரமுகர் பலி…!

0

திருச்சியில் இன்ஸ்பெக்டர் ஒருவர் 70 வயது தி.மு.க. பிரமுகரை கன்னத்தில் அறைந்ததால் அவர் கீழே விழுந்து பலியானார்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டடைமான் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது  தி.மு.க.வை சேர்ந்த சுப்பையா (70) என்கிற முதியவர் பிரசாரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.


அப்போது பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் வந்திருந்தனர். அந்த பெரியவர் அருகில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம், திருநாவுக்கரசர் வந்து போனார். அவருக்கு பாதுகாப்பாக ஒரு போலீஸ் வட வரவில்லை. ஆனால் இவர் பிரசாரத்துக்கு இவ்வளவு போலீசார் என்று கேட்டதாக கூறப்படுகிறது.


இதனை கவனித்த இன்ஸ்பெக்டர் காளியப்பன், பெரியவரை திடீரென தாக்கினார். அதில் சுப்பையா கீழே விழுந்து இறந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் கோபம் அடைந்தனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3 மணி நேரம் இந்த மறியல் தொடர்ந்தது.

Leave A Reply

Your email address will not be published.