போதைப்பொருள் கடத்தல் மன்னன் மதூஷூடன் கைது செய்யப்பட்ட அறுவர் நாடுகடத்தப்பட்டனர் !

0

பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்ட அவரின் உறவினர் உள்ளிட்ட 6 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.50 மணியளவில் நாடுகடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த 6 சந்தேகநபர்களையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பொறுப்பேற்றுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து குறித்த நபர்களிடம் தற்சமயம் விசாரணை செய்துவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

இதற்கமைய, மாகந்துரே மதூஷூடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 21 பேர் இதுவரையில் நாடு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.