மகள் மீது உயிரையே வைத்திருந்த ரித்தீஷ் ! கதறி அழுத உறவுகள்! குடும்ப புகைப்படங்கள் உள்ளே

0

மாரடைப்பால் மரணம் அடைந்த நடிகர் ரித்தீஷ் உடல் அவரது சொந்த ஊரான மணக்குடியில் அடக்கம் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் கடந்த சில நாட்களாக அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட பின்னர் தனது வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

மரணம் அடைந்த ரித்தீஷ் உடல், ராமநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அ.தி.மு.க. மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மரணம் அடைந்த ரித்தீசுக்கு ஜோதீஸ்வரி என்ற மனைவியும், ஹிருத்திக் ரோ‌ஷன், ஹாரிக் ரோ‌ஷன் என்ற மகன்களும், தானவி என்ற 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

மகள் தானவி மீது ரித்திக் தன்னுடைய உயிரையே வைத்திருந்ததாக கூறி உறவினர்கள் கதறி அழுத காட்சிகள், அங்கிருந்த அனைவரின் மனதையும் உலுக்கும் விதமாக இருந்தது.

Leave A Reply

Your email address will not be published.