யாழில் இன்றும் நாளையும் மின்தடைப்படவுள்ள பகுதிகள் விபரம் !

0

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் இன்றும்(03) நாளையும்(04) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி,இன்று புதன்கிழமை(03)காலை-08.30 மணி முதல் பிற்பகல் -05 மணி வரை யாழ்.வறுத்தலைவிளான், வீமன்காமம் ஆகிய பகுதிகளிலும், நாளை வியாழக்கிழமை(04) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை யாழ். அக்கரை,வளலாய்,அண்ணா சிலையடி,மண்டான் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.