யாழ்ப்பாணத்தில் கணவனின் தாக்குதல்களைத் தாங்க முடியாமல் 6 பிள்ளைகளுடன் தாய் எடுத்த முடிவு!

0

பெண் ஒருவர் ஆறு பிள்ளைகளுடன் யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

கணவனின் தாக்குதல்களைத் தாங்க முடியாத 37 வயது குடும்பப் பெண் தனது நான்கு பெண்பிள்ளைகள் உட்பட ஆறு பிள்ளைகளுடன் அவர் பொலிஸ் நிலையத்தில் தஞ்சடமடைந்துள்ளார்.

தென்மராட்சி கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண் தனது கணவன் தினமும் மது அருந்திவிட்டு வந்து தன்னையும் பிள்ளைகளையும் தாக்குவதால் தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸாரைக் கோரியுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் ஆறுபிள்ளைகளையும் தாயையும் சிகிச்சைக்காக சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.