யாழ்ப்பாணத்தில் கைக்குண்டுடன் விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம் !

0

யாழ்.புத்தூர் பகுதியில் கைக்குண்டை எடுத்து விளையாடியபோது குண்டு வெடித்ததில் பாடசாலை சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.

புத்தூர் மேற்கு நிலாவரை பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த குறித்த சிறுவன், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலை சிறுவன் தோட்டத்திற்குச் சென்று வீடு திரும்பியபோது, பயன்பாடற்ற காணி ஒன்றிற்குள்ளிருந்து கைக்குண்டொன்றை எடுத்துள்ளான். அந்த கைக்குண்டை வீதியில் எறிந்து விளையாடிய நிலையில் குண்டு வெடித்துள்ளது.

இதில் படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.