யாழ்ப்பாணத்தில் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் ! நடந்தது என்ன ?

0

யாழ். மாதகல் பகுதியில் பொலிஸாரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கஞ்சா போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டார் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் தாம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாதகல் பகுதியில் கஞ்சா போதைப்பொருள் வியாபாரியை பொலிஸார் கைது செய்ய முயன்றபோது, சந்தேகநபர் அங்கிருந்து தப்பி செல்ல முற்பட்டதாகவும் இதன்போது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அத்தோடு இதன்போது குறித்த நபரை பொலிஸார் கைது செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எனினும் இந்த விடயம் தொடர்பாக இளவாலை பொலிஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இளவாலை பொலிஸாரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சித்தங்கேணி பகுதியில் வைத்து 7.2 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவரை கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.