யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரிக்கு புதிய பீடாதிபதி நியமிப்பு !

0

வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியில் உப பீடாதிபதியாக கடமையாற்றி வந்த சுப்பிரமணியம் பரமானந்தம் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியற் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்றுச் சனிக்கிழமை(30)அவர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதியாக இதுவரை காலமும் பதவி வகித்து வந்த சதாசிவம் அமிர்தலிங்கம் நேற்றைய தினம் தனது 60 ஆவது வயதில் அரச பணியிலிருந்து ஓய்வுபெற்றதையடுத்தே புதிய பீடாதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதியாகப் பதவி வகித்து வந்த சதாசிவம் அமிர்தலிங்கத்தின் மணிவிழா நேற்று முன்தினம்(29)கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக நடந்தேறியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.