யாழ். பல்கலைக்கழகத்தில் குகை அமைத்து உறங்கும் விலங்கு! பலரையும் திரும்பிப் பார்கவைத்த காட்சி!!

0

சிறுவயதுகளில் சிங்க குகை பற்றி ஆவலுடனும், பிரமிப்புடனும் கதைகள் படித்திருப்போம். ஆனால், இன்று இலங்கையில் 140 வருடங்களுக்கு பிறகு வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவுள்ள நிலையில் விலங்குகளின் வாழ் நிலையும் மோசமாகவுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உள்ள மண்மேடொன்றில் வெயில் தாக்கத்தில் இருந்து தப்புவதற்கு சிறிய குகை ஒன்றை தன் காலால் அமைத்து ஒய்யாரமாக உறங்குகிறது இந்த நாய்.

மனிதர்களுக்கு மட்டுமல்ல வெயிலின் கொடுமை. விலங்குகளையும் பாடாய் படுத்துகிறது என்பதனை இந்தப் படங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

மனிதர்களே, இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவதற்கு ஐந்தறிவு ஜீவன்களான பறவைகள் விலங்குகளுக்கு வீட்டின், அலுவலகத்தின் எங்காவது இடங்களில் தண்ணீரை பாத்திரங்களில் ஊற்றி வையுங்கள். அவற்றை இரண்டு நாட்களுக்கொருமுறை நுளம்பு முட்டையிடாமல் மாற்றி விடுங்கள்.

பறவைகள், விலங்குகளை கொடிய வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்போம்.

படங்கள்: Mahalingam Arulkumaran

Leave A Reply

Your email address will not be published.