யாழ்.மக்கள் போரின் தாக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை !கட்டளை தளபதி தெரிவிப்பு

0

போர் நிறைவுற்று பல வருடங்கள் கடந்த போதும் அதில் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் இழப்புக்கள் ஆகியவற்றிலிருந்து யாழ்ப்பாண மக்கள் இன்னும் மீளவில்லையென அம்மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வெளியாகும் தனியார் பத்திரிக்கையொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே தர்ஷன ஹெட்டியாராச்சி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“எமக்கும் குடும்பம் என்றதொன்று உள்ளமையால்தான், அம்மக்களின் துயரங்களை உணர்ந்துகொள்ள முடிகின்றது.

ஆகையால்தான் அவர்கள் இழந்த அனைத்தையும் வழங்க முடியாதபோதும் எம்மால் முடிந்த மனிதநேய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

அந்தவகையில் அம்மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தி கொடுப்பதை நோக்காக கொண்டே அனைத்து படை வீரர்களும் அதற்காக பாடுபடுகின்றனர்.

இதனால் மக்களின் மனங்களை எங்களால் வெற்றிக்கொள்ள முடிந்துள்ளது. ஆனால் அரசியல்வாதிகள் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்” என தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.