யாழ். வலிகாமத்தில் கடும் வெயிலால் கருகும் நச்சு செடிகள் ! தீமையிலும் ஓர் நன்மை

0

யாழ்.வலிகாமத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்த வெயில் காரணமாக நச்சுச் செடிகளான பார்த்தீனியச் செடிகள் பரவலாகக் கருகி வருகின்றன.

வலிகாமத்தில் புன்னாலைக்கட்டுவன், குப்பிழான், ஏழாலை, ஈவினை,குரும்பசிட்டி, ஊரெழு ,சுன்னாகம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களிலும்,வீதியோரங்களை அண்டிய பகுதிகளிலும் நச்சுச் செடிகளான பார்த்தீனியச் செடிகளின் பரம்பல் அதிகரித்துக் காணப்பட்டன.

இதனால்,விவசாய நிலங்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கியதுடன்,சுற்றுச் சூழலுக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தன.

இந்நிலையில் அண்மைக்காலமாக கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவி வருவதால் பார்த்தீனியச் செடிகள் வலிகாமத்தின் பல்வேறு பகுதிகளிலும் வேகமாகக் கருகி வருகின்றன.

வடக்கு மாகாண சபையின் ஆட்சிக் காலத்தில் விவசாய அமைச்சால் யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்து வரும் பார்த்தீனியச் செடிகளின் பரம்பலைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும் அந்த முயற்சிகள் இடைநடுவில் கைவிடப்பட்டிருந்தன.

தற்போதும் பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட சில உள்ளுராட்சி சபைகள் பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தற்போது முன்னெடுத்து வருகின்ற போதும் அது திருப்திகரமானதாகவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.