ரஜினி வாக்களிக்கும்போது நடந்த பெரும் தவறு!

0

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 95 தொகுதிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த தேர்தலின் திரைப்பிரபலங்கள் பலரும் வரிசையில் நின்று வாக்களித்து விட்டு சென்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடி வருகை தந்தார்.

அப்போது அவருக்கு இடது கை விரலில் மை வைப்பதற்கு பதிலாக, வலது கை விரலில் மை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தேர்தல் பணியில் இருந்த ஊழியர்கள், தவறுதலாக ரஜினிகாந்தின் வலது கைவிரலில் மை வைத்திருக்கலாம் என்றும், ஊழியர் தவறு செய்தது தொடர்பாக அறிக்கை கேட்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், அதிக ரசிகர்களுடன் வாக்குச்சாவடி மையத்துக்கு ரஜினிகாந்த் வந்ததாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக அறிக்கை கேட்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.