ரவியின் கருத்துக்கு சீறிப்பாய்ந்த சஜித் பிரேமதாச!

0

தன்னைப் பற்றி அரசியல் மேடைகளில் வெவ்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதாகவும், எதிர்வரும் நாட்களில் நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? என்பதை நாட்டு மக்களுக்கு தெரிந்து கொள்ள முடியுமாக இருக்கும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமாகிய சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை, லுனுகம்வெஹர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

தான் தனது தந்தையில் பெயரை வைத்து அரசியல் நடாத்துவதாக சிலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். இந்த நாட்டில் எடுத்த பொறுப்புக்களை எல்லாம் ஊழல் மோசடி செய்து நாசமாக்கிய நபர்களே இவ்வாறு எம்மைப் பற்றி கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

மத்திய வங்கியில் என்ன செய்தார். மனைவியை வைத்து இலஞ்சம் வாங்க வழிகாட்டினார். நாட்டை ஒளி ஊட்டுவதற்கு கொடுத்த பொறுப்பை எடுத்தவுடன் நாடு இருளில் மூழ்கியது. இப்படியானவர்கள் தான் என்னைப் பற்றி கருத்துத் தெரிவிக்க முன்வந்துள்ளனர் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் புதிய தலைவருக்கு பிரதமர் பதவி கொடுக்கப்படப் போவதாக கூறப்படுவது குறித்து அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.

கட்சியில் உள்ள ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க எனவும், சிலர் செய்வது போன்று தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி ஐ.தே.கட்சியை பாதுகாக்க வேண்டிய தேவை கட்சிக்கு இல்லையெனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.