ராகுல் பிரதமராகட்டும்… நான் ஓரமாக உட்காருகிறேன்… தேவகவுடாவின் பெருந்தன்மை…

0

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமராகட்டும். நான் அவருக்கு அருகே ஒரு ஓரமாக அமர்ந்திருக்கிறேன் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் தேவ கவுடா கூறினார்.

நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடந்து வருகிறது. 7 கட்டமாக நடைபெற உள்ள தேர்தலில் இதுவரை 2 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. மீதம் 5 கட்ட தேர்தல்கள் நடக்க உள்ளன.

காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால், முன்னாள் பிரதராக இருந்த தேவகவுடாவை மீண்டும் பிரதமராக தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


இதுபற்றி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் தேவ கௌடா கூறுகையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலில் போட்டியிட மாட்டேன் என கூறியிருந்தேன். ஆனால் தற்போது போட்டியிட வேண்டிய கட்டாயமாகிவிட்டது. எனக்கு பிரதமராகும் ஆசை கிடையாது.

ஆனால் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதும் கிடையாது. அமையவுள்ள மக்களவையில் மோடி இருந்துவிடக் கூடாது என்பதே எனது கவலையாக இருக்கிறது. ராகுல் காந்தி பிரதமரானால் அவருக்கு அருகே அமர்ந்து கொள்வேன். நான் பிரதமராக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றார்.

Leave A Reply

Your email address will not be published.