வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பு ! நழுவுகிறது சுதந்திரக் கட்சி அணி !

0

வரவு செலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை(05)இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இன்றைய வாக்கெடுப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்காலத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இணைந்து செயற்படுவது தொடர்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஐக்கியதேசியக் கட்சியுடன் பேச்சுக்களை நடாத்தியுள்ளது.

இந்நிலையில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாடாளுமன்றத்தில் இடம்பெறும் வரவுசெலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை,இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோத்தாபய ராஜபக்ச போட்டியில் நிறுத்தப்படுவதை விரும்பவில்லை.

எனவே, அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கியதேசியக் கட்சியை ஆதரிக்கக் கூடுமெனவும் அரசியல் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.