வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவனின் சடலம் மீட்பு !

0

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிராம சேவையாளரின் மகன், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று பகல் 12.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தந்தையார் (கிராமசேவையாளர்) கடமை நிமித்தம் அவரது பணிக்கு சென்றிருந்த சமயத்தில், வீட்டில் யாரும் இல்லாத நிலையில், குறித்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இன்று காலை 11.30 மணியளவில் தந்தை மகனுக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டிருந்த சமயத்தில் மகன் தொலைபேசி அழைப்பினை எடுக்கவில்லை.

இதனையடுத்து குறித்த தந்தை (கிராம சேவையாளர்) வீட்டிற்கு சென்று மகனின் அறைக்கு சென்ற சமயத்தில் மகன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

குறித்த மாணவனின் தற்கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

இந்த நிலையில், பண்டாரிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமாக மீட்கப்பட்டவர், வவுனியா பிரதேச பாடசாலையொன்றின், க.பொ.த உயர்தரம் இறுதியாண்டு மாணவன் என்பதுவும் குறிப்பிடதக்கது.

Leave A Reply

Your email address will not be published.