விக்கிலீக்ஸ் இணைநிறுவனர் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படக்கூடாது ! எதிர்க்கட்சி தலைவர் தெரிவிப்பு

0

விக்கிலீக்ஸ் இணைநிறுவனர் ஜூலியன் அசாஞ்சை அமெரிக்காவுக்கு நாடுகடத்தக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் வலியுறுத்தியுள்ளார்.

நேற்றையதினம் லண்டனில் அமைந்துள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் பிரித்தானியப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட அசாஞ் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஆயிரக்கணக்கான ரகசிய அமெரிக்க ராஜதந்திர ஆவணங்களை விக்கிலீக்ஸ் நிறுவனம் வெளியிட்ட வழக்கில் அசாஞ் மீது தொடரப்பட்டுள்ள வழக்குக்காக அவரை தம்மிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா, பிரித்தானியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற அட்டூழியங்கள் பற்றிய ஆதாரங்களை அம்பலப்படுத்திய அசாஞ் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படக்கூடாது என ஜெரமி கோர்பின் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.