விக்கிலீக்ஸ் நிறுவுனரை எம்மிடம் ஒப்படையுங்கள் ! அமெரிக்கா தெரிவிப்பு

0

பிரித்தானிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சேயை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

விக்கிலீக்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்த ஜுலியன் அசாஞ்சே பிரித்தானிய பொலிஸாரினால் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே அவரை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

இரகசியத் தகவல்களை வெளியாக்கும் விக்கிலீக்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்த 47 வயதுடைய அசாங்கே கடந்த 7 ஆண்டுகளாக லண்டனில் உள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் அடைக்கலம் பெற்றுவந்தார்.

ஆயிரக்கணக்கான இரகசிய அமெரிக்க அரசதந்திர ஆவணங்களை விக்கிலீக்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அவற்றில் பல விடயங்கள் உலகத் தலைவர்களைச் சாடும் வகையில் அமைந்திருந்தன.

இந்நிலையில் ஈக்குவடோர் அரசாங்கம் அசாஞ்சேக்கு அளித்த அடைக்கலத்தை மீட்டுக்கொண்டதைத் தொடர்ந்து பிரித்தானிய பொலிஸ் அவரை கைதுசெய்துள்ளது.

எவ்வாறாயினும், அமெரிக்காவில் அவர் மரண தண்டனையை எதிர்நோக்கும் அச்சுறுத்தல் காணப்பட்டால் நாடுகடத்த மாட்டோம் என பிரித்தானியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.