விஞ்ஞானி தெர்மாகோல் ராஜுவுக்கு வயசாயிடுச்சு ! வறுத்தெடுத்த குஷ்பூ

0

தம்மை கிண்டலடித்த அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு நடிகை குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டம்னற இடைத்தேர்தல் நெருங்க இன்னும் சில நாட்களே உள்ளது. பல்வேறு கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்கட்சிகளின் ஊழல்களை ஆளுங்கட்சியினரும், ஆளுங்கட்சியினரின் ஊழல்களை எதிர்கட்சிகளும் சொல்லி மாறி மாறி குறை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் பரப்புரை ஒன்றில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு குஷ்பூ இளமை வயதில் தொட்டால் சிவக்கும் அழகில் இருந்தார். அப்போதே அவரது பரப்புரையை மக்கள் கண்டுகொள்ளவில்லை. இப்பொழுது வயதாகிவிட்டது யாரும் அவரை திரும்பி பார்க்கமாட்டார்கள் என படுமோசமாக விமர்சனம் செய்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக குஷ்பு தனது டிவிட்டரில் விஞ்ஞானி தெர்மாகோல் ராஜுவுக்கு வயசாயிடுச்சுன்னு நல்லா தெரியுது. பாவம் என்னனமோ பேசிட்டு இருக்கார். இன்னும் 30 வருஷம் கழிச்சும் நான் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.