விமான நிலையத்தில் செல்பி எடுத்தால் மரணதண்டனை! தாய்லாந்து அரசு அதிரடி!

0

விமான நிலையம் அருகே செல்ஃபி எடுத்தால் அதிகபட்சம் மரணதண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாய் காவோ என்ற கடற்கரைப் பகுதியை ஒட்டி விமானநிலையம் ஒன்று அமைந்துள்ளது.

இதனால் விமானம் ஏறுவதும் இறங்குவதும் தரையிலிருந்து சில அடி உயரத்தில் நடப்பது வழக்கம்.

இதன் காரணமாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் விமானம் பறக்கத் துவங்கும்போது செல்ஃபி எடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் விமானத்தின் என்ஜினில் இருந்து வெளியாகும் அதிவேக காற்றில் சிக்கி சிலர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதன் காரணமாக மாய் காவோ விமானநிலையம் முன் செல்ஃபி எடுக்க தடை விதிக்கப்பட்டது.இதனை மீறுபவர்களுக்கு மிக அதிக அபராதமும், அதிகபட்சமாக மரண தண்டனையும் வழங்கப்படும் என்றும் தாய்லாந்து அரசு எச்சரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.