வெளியானது பிளஸ்டு தேர்வு முடிவுகள் ! எத்தனை சதவீதம் தேர்ச்சி தெரியுமா !

0

தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

நேற்று முழுவதும் தமிழகத்தில் தேர்தல் ஜூரம் அடித்து ஓய்ந்தது. அதையடுத்து இன்று பிளஸ்டு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கின்றன. இன்று காலை 9.30 மணிக்கு இணையத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள பிளஸ்டு மாணவர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி பொதுத் தேர்வுகள் நடந்தன. மொத்தமாக 8 ,87,992 பேர் தேர்வு எழுதினர். தேர்வுத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 11 ஆம் தேதி நிறைவுபெற்றன. இதையடுத்து www.tnresults.nic.in மற்றும் , www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கின்றன. இதைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் உறுதிப்படுத்தினார்.

கடந்த சில ஆண்டுகளாக தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் சில மாற்றங்களை அரசு செய்துள்ளது. மாநில அளவில் முதல் மதிப்பெண், மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் ஆகியவற்றை வெளியிடுவதில்லை. இது தேவையில்லாமல் மாணவர்கள் மத்தியில் தாழ்வு மனப்பாண்மையை விதைக்கிறது என்கிற காரணத்தால் அரசு தவிர்த்துள்ளது. அதேப் போல நீட் தேர்வு, மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு போன்ற காரணங்களாலும் மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எளிமையாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தேர்வு முடிவுகளில் மொத்தமாக 91.03 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 88.57 சதவீதமும் மாணவிகள் 93.64 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளன. மாணவர்களை விட மாணவிகள் 5 சதவீதம் அதிகளவில் தேர்ச்சியடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.