ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ராக்கெட் பூஸ்டர்கள் மீண்டும் தரையிறக்கி சாதனை!

0

பொதுவாக ராக்கெட்டுகள் ஏவப்படும் போது அதில் பொருத்தப்பட்டிருக்கும் பூஸ்டர்கள் தனியாக கழன்று கடலில் விழுந்து விடுவது வழக்கம்.

ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மீண்டும் பயன்படக்கூடிய பூஸ்டர்களை தயாரித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள கேப் கேனவரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் அராப்சாட் 6ஏ என்ற செயற்கைக் கோளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவியது.

ராக்கெட் புறப்பட்ட 30 நிமிடங்களில் அதில் பொருத்தப்பட்டிருந்த பூஸ்டர்கள் பத்திரமாக தரையிறங்கின.

Leave A Reply

Your email address will not be published.