சிங்கள இராணுவத்தில் ஒருவர்கூட நல்லவர் இல்லையா? நடுகல் நாவல் வெளியீட்டில் யமுனா ராஜேந்திரன்

0


சிங்கள இராணுவத்தில் ஒருவர்கூடவா நல்லவன் இல்லை என்று லண்டனை சேர்ந்த யமுனா ராஜேந்திரன் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். நேற்று லண்டனில் நடந்த, நடுகல் நாவல் வெளியீட்டில் எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் என்பவர் இவ்வாறு பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியானது.  

முட்கம்பி முகாமினுள் ஒருவர் கூட நல்லவர் இல்லையா என்கின்ற வகையில் கேள்வி எழுப்பிய யமுனா ராஜேந்திரன் சிங்கள இராணுவத்திற்கு ஆதரவாக பேச முற்பட்டமை தமிழர்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்திய செயலாகும்.

நாவலில் வரும் வினோதன், தனது தாய் தங்கையை தேடி முள்வேலி முகாம் செல்கின்ற காட்சி பற்றி பேசிய ராஜேந்திரன்,“இவர் முள்வேலி முகாமுக்கு தாய் சகோதரியை தேடி போகும் போது ஒருத்தன்கூட கூட நல்லவன் இல்லையா?” என்று யமுனா ராஜேந்திரன் கேள்வி எழுப்பினார். அதனால் இது பக்கச் சார்பானது என்றும், நாவல் இல்லை என்றும் கூறினார்.

அங்கு நடுகல் நாவல் விமசன அரங்கிற்கு முன்னர் புலி எதிர்ப்பு எழுத்தாளரான கருணாகரனின் அன்பின் திசைகள் என்ற நூல் விமர்சனம் நடந்தது. இரு வேறு மனநிலையில் எழுதப்பட்ட நாவல்களின் வெளியீட்டில் பங்குபற்றிய உரையாளர்கள் அங்கே புலிகளின் கொள்கை பற்றி திரித்து எழுதிய அன்பின் திசைகள் என்ற நூலினை ஏக மனதாக பாராட்டி, நடுகல் நாவலினை மட்டும் பக்க சார்பான நாவலாக விமர்சித்தனர்.

இதே அன்பின் திசைகள் என்ற நூலில் மேதகு வே பிரபாகரன் ஏதோ மக்களை ஏமாற்றி அடக்குமுறைக்குள் வைத்திருக்க முற்பட்டது போன்று தமிழின வரலாற்றை மாற்றி திரிபு படுத்திய நூலுக்கு எந்த எந்த கடும் விமர்சனமும் இல்லாமற்போனமை இந்த இலக்கிய அமைப்புகள் என்ற போர்வையில் புலி எதிர்ப்பு அரசியலை செய்வது போன்றே எண்ண தோன்றுகின்றது. 

இயக்கம் சாதி ஒழிப்பு மற்றும் தமிழ் பாரம்பரியத்தை மீள நடைமுறை படுத்த முயற்சிக்கப்பட்டதாகவும் அதற்காக இறைச்சி பொங்கல் ஒன்று ஏற்பாடு செய்ய பட்டதாகவும் அதனால் மக்கள் அதனை எதிர்த்த போது பிரபாகரன் தளபதிகளிடம் தமிழீழம் கிடைக்கும் வரை அமைதியாக இருக்கும் படியும் அதன் பின்பு நாங்கள் வைத்துதான் சட்டம் அதற்கு பின் இதை நடைமுறைப்படுத்தலாம் என்றவகையில் ஒரு திரிவுபடுத்திய புத்தகத்தை பாராட்டியவர்கள் நடுகல்லை எதிர்ப்பார்கள்.   

மேலும் நடுகல் விமர்சனம் என்று கூறிப் பேசிய கோகுலரூபன், விமானங்கள் குண்டு வீச வரும்போது சிறுவர்கள் கல் எறிவதும் தடிகளை துவக்காக உருவகித்து சுடுவது போன்ற கருத்தை கடுமையாக சாடியிருந்தார். அது பொய்யானதாக, மிகையானதாக சொன்னார். அங்கு வாழ்ந்த சிறுவர்கள் அவ்வாறுதான் இருந்தார்கள் கோகுலரூபனுக்கு இது தெரியாமல் போனது மிகவும் வியப்புத்தான். போர் காலப்பகுதியில் வன்னியில் சிறுவர்களாக இருந்தவர்களிடம் இது சம்பந்தமாக கருத்துகளை கேட்டால் அவர் புரிந்து கொள்வார் என நினைக்கின்றோம்.

விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் கேவலப்படுத்தும் இலக்கியங்களை உன்னதமாக கொண்டாடுபவர்களுக்கு நடுகல்மீது ஒவ்வாமை ஏற்படும்தான். விடுதலைப் புலிகளை விமர்சிக்கவே இல்லை அதனால் ஒற்றை தரப்பு பிரச்சாரம் என்றும் கூறுபவர்கள் நடுகல்லின் எத்தனையோ பக்கங்களை இருட்டடிப்பு செய்வதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. புலி எதிர்ப்பு கோஷ்டி நடாத்திய இந்த நிகழ்வு பெருத்த ஏமாற்றத்தை தந்திருந்தாலும், நடுகல் நாவல் எப்படி முடிக்கியம் கொண்டது? அதனை நாம் ஏன் கொண்டாட வேண்டும் என்ற விளக்கத்தையும் தந்தது. 

Leave A Reply

Your email address will not be published.