13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமுக பாதிரியார் !

0

அமெரிக்க தேவாலயத்தில் இந்திய பாதிரியார் ஒருவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

டகோட்டா மாகாணத்தில் ரேபிட் நகர தேவாலயத்தில் ரோமன் கத்தோலிக்க பாதிரியாராக பணியாற்றி வந்த ஜான் பிரவீன் (வயது 38). இந்தியரான இவரது சொந்த ஊர் ஐதராபாத்.

இவர் கடந்த ஆண்டு தனது தேவாலயத்தில் 13 வயது சிறுமிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தமையைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த பெப்ரவரி மாதம் நீதிமன்றில் விசாரணை நடைபெற்றபோது அவர் தன்மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் தண்டனைக்காக அவர் நேற்று முன்தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவருக்கு அதிகபட்சம் ஓராண்டு காலம் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால் நீதிபதி ஸ்டீவன் மாண்டெல் அவருக்கு 6 ஆண்டு கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

அவர் ஏற்கனவே சிறையில் இருந்த 178 நாட்கள் தண்டனையில் கழிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் 3 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் பரோலில் விடுதலை செய்யப்படலாம். அப்படி அவர் பரோலில் விடுவிக்கப்பட்டால், அவரை உள்நாட்டு பாதுகாப்புத்துறை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நீதிமன்றில் தனது குற்றத்துக்காக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் அவர் மன்னிப்புக் கோரியமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.