2வது திருமணத்துக்கு வற்புறுத்தியதால் மாணவி கொலை ! சந்தேக நபர் அதிர்ச்சி வாக்குமூலம்

0

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொடூரமாக கொலை வழக்கில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அத்தை மகனே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது.

இந்நிலையில், இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவந்த திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த 21-வயதான மாணவி, கல்லூரியிலிருந்து வெள்ளிக்கிழமை மதியம் புறப்பட்ட நிலையில், வீடு திரும்பவில்லை.

பெற்றோர் கோமங்கலம் பொலிஸ் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து, அவரை பொலிஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், பொள்ளாச்சியை அடுத்த பூசாரிபட்டி என்ற கிராமத்தில், மாணவி கழுத்தறுக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.

கோவை அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட உடற்கூறாய்வில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும், மூன்று இடங்களில் கத்தியால் குத்தப்பட்டதும் தெரியவந்தது. உடற்கூறு ஆய்வை தொடர்ந்து மாணவியின் சடலம் பெற்றோரிடம் நேற்று பிற்பகல் ஒப்படைக்கப்பட்டது.

மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து 4 தனிப்படைகளை அமைத்து பொலிஸார், அதிரடி விசாரணையை தொடங்கினர்.

மாணவி கல்லூரியில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்ற வழியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை, ஆய்வு செய்தனர். அதில், மாணவியின் உறவுக்கார இளைஞர் சதீஷ்குமார் என்பவர், அவரை அழைத்துச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

அவர் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் அவரை தேடி வந்தனர். கொடைக்கானல் மலை அடிவாரத்தில் பதுங்கி இருந்த சதீஷ்குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேரளாவில் கந்துவட்டி தொழிலில் ஈடுபட்டு வரும் சதீஷ்குமார், கொலை செய்யப்பட்ட மாணவியும், ஏற்கனவே ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். இதையறிந்து பெற்றோர் தனது விருப்பம் இல்லாமல் வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்துவிட்டதாக சதீஷ்குமார் கூறியுள்ளார்.

மனைவி, குழந்தையுடன் வசித்து வந்த நிலையில், அத்தை மகளுடன் பேச்சுவார்த்தையை குறைத்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் அத்தை மகளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் உன்னுடன் தான் வாழுவேன் என்று கூறி தன்னை தொந்தரவும் செய்ததாகவும் சதீஷ்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். மாணவியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, நிறைய செலவு செய்து கடனாளியாகிவிட்டார். இந்த நிலையில், மேலும், மாணவி நகை, பணம் கேட்டதாக சதீஷ் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை கல்லூரி சென்ற அவரை, தன்னுடன் அழைத்துச்சென்று, கொலை செய்து சாலையோரத்தில் வீசியதாக சதீஷ்குமார் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து சதீஷ்குமாரைக் கைது செய்த பொலிஸார் அவரிடம், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.