2208 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

0

பண்டிகை காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 2 ஆயிரத்து 208 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, மின் உபகரணங்களை உத்தரவாதமின்றி விற்பனை செய்தமை, காலவதியான பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் விலைகளை காட்சிப்படுத்தாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதேவேளை இவ்வருடத்தில் இதுவரை 7 ஆயிரம் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு அதன் ஊடாக 5 ஆயிரத்து 600 க்கும் மேலதிகமான வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் கலாநிதி லலித் செனவீர தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.