71 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட 23 வயதான அழகிய இளம்பெண்!

0

71 வயதான தொழிலதிபர் 23 வயதான அழகிய இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த தொழிலதிபரையே அந்த பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் வருடத்தில் சில மாதங்கள் மட்டுமே மனைவியுடன் தங்குகிறார்.

பிரித்தானியாவின் Merseyside கவுண்டியை சேர்ந்தவர் தாமஸ் கிரேக் (71). இவருக்கு பிலிப்பைன்ஸை சேர்ந்த லோரி டேல்ஸ் (23) என்ற இளம் பெண்ணுடன் கடந்த 2014ஆம் ஆண்டு பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது.

லோரி புகைப்படங்களை பேஸ்புக்கில் பார்த்தவுடனேயே அவர் அழகில் தாமஸ் மயங்கியுள்ளார். பின்னர் அதே ஆண்டு ஜூலை மாதம் லோரியை காண பிலிப்பைன்ஸுக்கு சென்றார் தாமஸ்.

அங்கு இருவரும் சில மாதங்கள் டேட்டிங் சென்ற நிலையில் தனது காதலை லோரியிடம் தாமஸ் வெளிப்படுத்தினார். இதன்பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது மேரி (2) என்ற குழந்தை தம்பதிக்கு உள்ளது.

வருடத்தில் ஐந்து மாதங்கள் பிலிப்பைன்ஸுக்கு சென்று தனது மனைவியுடன் தங்கும் தாமஸ், பின்னர் பிரித்தானியாவுக்கு திரும்பிவிடுவார். மேலும், மற்ற நாட்களில் ஸ்கையிப் வீடியோ கால் மூலம் தாமஸும், லோரியும் ஒருவரையொருவர் பார்த்து பேசி கொள்கின்றனர்.

லோரி கூறுகையில், இணையம் மூலம் என்னை தாமஸ் விலை கொடுத்து வாங்கி விட்டார் என பலரும் விமர்சனம் செய்வார்கள். எங்களது உறவுமுறை அவ்வளவு எளிதாக அமையவில்லை, வாழ்க்கையில் பல ஏற்ற, இறக்கங்களை பார்த்துள்ளோம்.

என்னை பேஸ்புக்கில் பார்த்துடன் அவருக்கு பிடித்து விட்டது. ஆனால் எனக்கு அவர் மீது உடனடியாக காதல் வரவில்லை. தாமஸ் வயதானவராக இருந்தாலும், அந்தளவு வயதானவராக எனக்கு தெரியவில்லை

வயதானவரை காதலிக்கிறேன் என்றதும் முதலில் என் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தார்கள். ஆனால் பின்னர் எங்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். என் கணவரின் நீல நிற கண்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், வயது என்பது வெறும் எண் தான்,

எங்கள் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம் என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.