850 ஆண்டு பழமையான தேவாலயம் தீக்கிரை!

0

உலகளவில் அதிக சுற்றுலா பயணிகளை கவரும் பாரிஸில் உள்ள 850 ஆண்டு பழமையான நோட்ரே டேம் கதீட்ரல் ஆலயத்தை பார்வையிடுவதற்காக ஆண்டுதோரும் மக்கள் இங்கு குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆலயத்தின் மேற்கூரையில் உள்ளூர் நேரப்படி மாலை 5:50 மணியளவில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது.

இதனை அறிந்த பிராண்ஸ் நாட்டின் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

மேலும், இந்த தீ விபத்திற்கான காரணத்தை கண்டறிய தீவிர விசாரணையும் நடைபெற்றுவருகின்றனர்.

அதுமட்டுமின்றி, தேவாலயத்தின் சிகரம் தற்போது 6 மில்லியன் யூரோ (6.8 மில்லியன் டாலர்) மதிப்புள்ளது என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

856 ஆண்டு கால பழமை வாய்ந்த இந்தப் பேராலயம் கி.பி 1760 வரை மன்னர்களின் அனுசரணையுடன் அரசியலிலும் பிரெஞ்சு மக்களது வாழ்வியல் தளத்திலும் செல்வாக்கு செலுத்தும் ஒரு அமைப்பாக இருந்து வந்தது. பிரெஞ்சுப் புரட்சியின் பின்னர் குறிப்பாக கி.பி 1793 அளவில் மதத்தை அரசியலில் இருந்து வேறுபடுத்தி வைக்கும் நடைமுறை ஆரம்பித்தபோது இந்தப் பேராலயம் அரசு மீதும் மக்கள் மீதும் ஆளுமையைச் செலுத்தும் தனது பிடிமானத்தை இழந்தது.

பிரெஞ்சு புரட்சிக்காலகட்டத்தில் இந்தப் பேராலயத்தின் பெரும் பகுதி புரட்சியாளர்களின் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டது. அத்துடன் அந்தக் காலகட்டத்தில் இடம்பெற்ற மோதல்களில் இந்தப் பேராலயத்தின் பல பகுதிகள் சிதைவடைந்தன.புரட்சிக்குப் பின்வந்த அரசு இந்தப் பேராலயத்தைப் புதுப்பிப்பதற்கும் அதன் இருப்பையும் அதிகாரத்தையும் பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கும் விரும்பவில்லை.

கி.பி. 1801 ல் நெப்போலியன் பொனபாட் ஆட்சிக்கு வந்த பின்பு இந்தப் பேராலயத்தைப் புதுப்பிப்பதற்கான ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டு வேலைகளும் நடந்தன.
ஆனால் நெப்போலியனின் மறைவுக்குப் பின்பு இந்தப் பேராலயம் மீண்டும் அரசின் ஆதரவை இழந்தது.

பிரான்சில் புகழ்பெற்ற எழுத்தாளரான விக்டர் ஹூகோ கி.பி.1831 ம் ஆண்டு இந்தப் பேராலயத்தின் அவலநிலை பற்றி ஆதரங்களுடன் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார்.அதை தொடர்ந்து செல்வந்தர்களினது மக்களினதும் நிதிபங்களிப்புடன் இந்த பேராலயத்தைப் புதுப்பிக்கும் பணிகள் நடந்தன. அதன் பின் பின் முதலாம் இரண்டாம் உலக யுத்த காலத்தில் இந்த பேராலயம் மீண்டும் அதிக பேரழிவுகளைச் சந்தித்து.

1944 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாசி ஆக்கிரமிப்பிலிருந்து பிரான்ஸ் விடுதலையான பின்பு ஆட்சிக்கு வந்த ஜெனரல் சாள்ஸ் து ஹோல் இந்த பேராலயத்தைப் புனரமைப்பதற்கு முன்வந்தார்.26.08.1944 அன்று பிரெஞ்சு குடியரசின் விடுதலையைக் கொண்டாடும் முகமாக மிகப்பெரிய ஆராதனை நிகழ்வொன்றை இந்தப் பேராலயத்தில் நிகழ்த்தினார்.

இன்றைய நவீன பிரெஞ்சு குடியரசில் இந்தப் பேராலயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொக்கிசமாகப் பார்க்கப்பட்டது.அதனுடைய மதப் பாரம்பரியம் வழிபாட்டு சுதந்திரம் என்பன அங்கீகரிக்கப்பட்டாலும் மன்னர் காலத்தைப் போல அரசியலிலும் மக்களது வாழ்வியலிலும் அதிகாரம் செலுத்தும் இந்த பேராலயத்துக்கு வழங்கப்படவில்லை.

வரலாற்று பொக்கிசத்தை பேணிப்பாதுகாப்பது என்ற அடிப்படையில் இந்த பேராலயத்தின் கட்டிட புனரமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதே நேரம் தீவிரவாத அச்சுறுத்தலிலிருந்து இந்தப் பேராலயத்தைப் பாதுகாப்பதிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

பல்வேறு வரலாற்றுச் சான்றுகளை தன்னகத்தே கொண்ட இந்த பேராலயம் இன்று தீக்கிரையாகிப் போனது ஒரு வரலாறாகவே பதியப்படும்.

Leave A Reply

Your email address will not be published.