அனுஷ்காவை திருமணம் செய்து கொண்ட பின் பொறுப்பான ஆளாக மாறியுள்ளேன் ! விராட்கோலி தெரிவிப்பு

0

நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்த பின் பொறுப்பான தலைவனாக முன்னேற்றம் அடைந்துள்ளதாக இந்திய அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி, பொலிவூட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடக்கும் 12வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க கோலி உட்பட இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து சென்றுள்ளனர்.

இது கோலி பங்கேற்கும் மூன்றாவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடராகும். கடந்த 2011ல் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்ற அணியில் கோலி முதல் முறையாக இடம் பெற்றிருந்தார்.

தொடர்ந்து 2015ல் ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற கோலி, தற்போது கேப்டனாக தனது முதல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளார்.

இதற்கிடையில் அனுஷ்காவை திருமணம் செய்து கொண்ட பின் பொறுப்பான ஆளாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோலி கூறுகையில், “பொதுவாக திருமணத்துக்கு பின் அனைவருக்கும் பொறுப்பு அதிகரிக்கும். வாழ்க்கையில் அது மிகவும் வித்தியாசமான பொறுப்பு. பல விஷயங்கள் திருமணத்துக்கு பின் புரியத்துவங்கும்.

நானும் அதே போலத்தான் அனுஷ்காவை திருமணம் செய்து கொண்ட பின் பொறுப்பான ஆளாக மாறியுள்ளேன். இது என்னை மேலும் சிறந்த தலைவனாக மாற்றியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.