அவுஸ்திரேலியா பிரதமர் மீது முட்டை வீசி தாக்குதல்!

0

அவுஸ்திரேலியாவில் வரும் 18-ந் திகதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் ஸ்காட் மாரிசன் மீண்டும் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

நேற்று முன்தினம் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் உள்ள அல்புரியில் பிரதமர் ஸ்காட் பிரச்சாரம் செய்தார். அப்போது அங்கு நாட்டின் பெண்கள் அமைப்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் பிரதமர் ஸ்காட்.

கூட்டத்தில் பேசிவிட்டு மேடையில் இருந்து இறங்கினார் ஸ்காட். அப்போது கூட்டத்தில் இருந்த 25 மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் யாரும் எதிர்பாராத நேரத்தில் பிரதமர் மீது தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் முட்டையை வீசினார்.

இதையடுத்து அந்த பெண்ணை அங்கிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.