அவுஸ்திரேலிய தேர்தல் முடிவு – லிபரல் கூட்டணி வெற்றி!

0

அவுஸ்திரேலியாவில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி பிரதமர் ஸ்கொட் மொரிஸன் தலைமையிலான லிபரல் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

அதையடுத்து, எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் பில் ஷார்ட்டன் தனது தோல்வியை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் தற்போது லிபரல் கட்சி – தேசிய கட்சியின் கூட்டணி ஆட்சி செய்து வரும் நிலையில், இந்த தேர்தலில் எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றிபெறும் என்று தேர்தலுக்கு பின்னரான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தன.

இருப்பினும், இந்த அத்தனை முடிவுகளையும் பொய்யாக்கும் விதத்தில் இந்த வெற்றி முடிவுகள் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு 76 ஆசனங்கள் போதும் என்ற நிலையில், 77 ஆசனங்களைப் பெற்றுள்ளதாகவும் அந்நாட்டு தேர்தல் தகவல்கள் குறிப்பிட்டுக் காட்டியுள்ளன. 

Leave A Reply

Your email address will not be published.