உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரித்தானியாவில் அஞ்சலி !

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்த கோரச் சம்பவம் இடம்பெற்று ஒருமாதகாலம் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பிரித்தானியாவில் வாழும் மட்டக்களப்பு மக்கள் ஒன்றியத்தினால் நேற்று (திங்கட் கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

லண்டனில், ஹறோவில் அமைந்துள்ள சென். அன்ரூஸ் தேவாலய மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், விசேட பிரார்த்தனை வழிபாடு இடம்பெற்றதுடன் உயிரிழந்தோருக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பல மதத்தலைவர்களும் கலந்துகொண்டு தமது அனுதாபச் செய்தியினை தெரிவித்தனர்.

கொச்சிக்கடை, கட்டுவாபிடிய மற்றும் மட்டக்களப்பு தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் என 9 இடங்களில் ஏப்ரல் 21 ஆம் திகதி தற்கொலை பயங்கரவாத குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் 500 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.