எந்தவொரு இந்துவும் தீவிரவாதியல்ல! கமலுக்கு மோடி பதிலடி!!

0

எந்தவொரு இந்துவும் தீவிரவாதியல்ல என்றும் அவ்வாறு தீவிரவாதியாக இருந்தால் அவர் இந்துவாக இருக்க முடியாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

‘உலகமே ஒரு குடும்பம்’ என்பதே இந்துக்களின் தாரக மந்திரம் என குறிப்பிட்ட மோடி, ஒரு இந்து யாரையும் கொலை செய்வதோ, காயப்படுத்துவதோ இல்லை  என்றும் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவரது பெயர் நாதுராம் கோட்சே எனவும் தெரிவித்திருந்தார்.

கமல்ஹாசனின் குறித்த கருத்து நாடெங்கிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்யப்பட்டிருந்தது.

இருப்பினும் குறித்த மனு மீதான விசாரணை  தள்ளுப்படி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.