ஏப்ரல் 21 பயங்கரவாதத்துக்கு உதவியவர்களுக்கு மரண தண்டனை!

0

கடந்த 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கு மாத்திரமன்றி, அதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளுக்கு எதிராக மரண தண்டனை வழங்கப்படுவதுதான் பொருத்தமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த பயங்கரவாதத்துக்கு நிதி உதவி உட்பட சகல விதத்திலும் ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு தேவையான சட்டம் இலங்கைக்குள் காணப்படுவதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.