குடும்பத்துடன் சென்று ஓட்டு போட்ட தல டோனி ! படங்கள் உள்ளே

0

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி தனது குடும்பத்துடன், சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்று வாக்களித்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவானது உத்திரபிரதேசம் (14), ராஜஸ்தான் (12), மேற்கு வங்கம் (7), மத்திய பிரதேசம் (7), பிகார் (5), ஜார்கண்ட் (4)ஜம்மு காஷ்மீர் (2) ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், சென்னை அணியின் கேப்டனுமான டோனி, தன்னுடைய குடும்பத்துடன் சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்று ஜவஹர் வித்யா மந்திர் வாக்குச்சாவடியில் வாக்கினை பதிவிட்டுள்ளார்.

மேலும் தன்னுடைய மகளுடன் இருக்கும் ஒரு வீடியோ ஒன்றினை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‘என்னுடைய அப்பாவை போல அனைவரும் உங்களுடைய வாக்குகளை பயன்படுத்துங்கள்’ என ஜூவா கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.