குமுதினி படகுப் படுகொலை: 34 ஆண்டுகளாகியும் நெஞ்சைவிட்டு அகலாத நினைவுகள்

0

யாழ்ப்பாணத்தில் குமுதினி படகுப் படுகொலை இடம்பெற்று இன்றுடன் 34 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

 

அந்த வகையில் தமது உறவுகளைப் பறிகொடுத்தவர்கள், அவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி இன்று (புதன்கிழமை)  விசேட பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்தனர்.

1985ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி, நெடுந்தீவு – புங்குடுதீவுக்கு இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் இலங்கை கடற்படையினரால் வெட்டியும், சுடப்பட்டும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

நடுக்கடலில் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூர படுகொலையில் குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33பேர் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.

குமுதினி படகுப் படுகொலை க்கான பட முடிவு

நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆறு பேர் குமுதினிப் படகில் ஏறினர். படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வொருவரையும் தமது பெயர், வயது, முகவரி, எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை உரத்துக் கூறும்படி பணிக்கப்பட்டார்கள்.

குமுதினி படகுப் படுகொலை க்கான பட முடிவு

பின்னர் அவர்கள் வாள்களாலும் கத்திகளாலும் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதன்போது, கொலை பயம் காரணமாக கடலில் குதித்தவர்கள் கடற்படையினரால் சூடப்பட்டதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, குமுதினி படகின் துயரத்தை நினைவுகூரும் வகையில் நெடுந்தீவின் மகாவலித்துறையில் நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.