கேதார்நாத் பனிக்குகையில் மோடி – நாளை காலை வரை தியானம் செய்ய முடிவு

0

கேதார்நாத் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள குகைக்கோயிலுக்குள் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். நாளை காலைவரை தியானம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத்தேர்தல் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. முன்னதாக அமித்ஷா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி அருகில் அமர்ந்திருந்தார். `பிரதமர் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும் என்று அவசியமில்லை’ என அமித்ஷா கூறினார். பிரஸ்மீட்டில் மோடி அமைதிகாத்தது குறித்து பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். நாளை இறுதிக்கட்ட தேர்தல் நாடு முழுவதும் நடைபெறுகிறது.

பிரதமர்

இதையடுத்து 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் உத்ரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாநிலத்தில் புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் அமைந்துள்ளது. பிரசித்திபெற்ற கோயில் என்பதால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கே வருவது வழக்கம். கடல் மட்டத்திலிருந்து 11,000 அடிக்கு மேலே உள்ளது இந்தக் கோயில். கோயிலின் நடை சமீபத்தில்தான் திறக்கப்பட்டது.

கேதார்நாத்

இதையறிந்து கோயிலுக்குள் குவிந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். டெல்லியிலிருந்து விமானம் மூலம் உத்ரகாண்ட் மாநிலம் ஜோலிகிராண்ட் வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் சென்றார் மோடி. கேதார் நாத் கோயிலில் வழிபாடு நடத்தினார்.

பயணம்

பின்னர் அங்கு நடக்கும் பணிகளைப் பார்வையிட்டார். பின்னர் கேதார்நாத் குகைக்கோயிலுக்குள் சென்றார். அங்கு தியானத்தில் ஈடுபட்டார். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றுள்ளனர். அங்குள்ள பனிக்குகையில் மோடி, நாளை காலை வரை தியானத்தில் ஈடுபடுவார் எனக் கூறப்படுகிறது. அவர் தியானம் மேற்கொள்ளும் குகையில் பெட் மற்றும் தலையணை வைக்கப்பட்டுள்ளது.
 

Leave A Reply

Your email address will not be published.