சமூக வலைத்தளங்களை முழுமையாக தடை செய்யப்போவதில்லை-ரணில்!

0

சமூக வலைத்தளங்களை முழுமையாக முழு நாட்டுக்கும் தடைசெய்ய அரசாங்கம் ஒரு போதும் நடவடிக்கை எடுக்கவில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

ஏதாவது சம்பவமொன்று இடம்பெற்றால், அந்த சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்துக்கு மாத்திரம் அமுலுக்கு வரும் வகையில் சமூக வலைத்தளங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. அதனை முழு நாட்டுக்கும் தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

அலரி மாளிகையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

முழுநாட்டுக்கும் அமுலுக்கு வரும் வகையில் சமூக வலைத்தளங்களை தடை செய்த போதிலும், மாற்று வழிகள் ஊடாக சமூக வலைத்தளங்களை தொடர்பு கொள்ளும் வீதம் அதிகரித்துள்ளதாக தனக்கு தகவல்கள் கிடைத்ததாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

Leave A Reply

Your email address will not be published.