செருப்பு வீசியவருக்கு பொன்னாடை! கமலை கடுப்பேத்தும் எச்.ராஜா!

0

மதுரை வில்லாபுரத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் பொதுக்கூட்டத்தில் பேசும்போது,  மேடை மீது ஒருவர் செருப்பை வீசினார். சிலர் கமலுக்கு எதிராக கோஷமிட்டனர்.

போலீஸ் விசாரணையில் செருப்பு வீசியவர் பாஜக தொண்டர் என தெரியவந்தது.

இந் நிலையில், கமல் மேடை மீது செருப்பு வீசிய இளைஞரை, தனது வீட்டுக்கு வரவழைத்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து பாராட்டினார். மேலும், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், கமல ஹாசனை செருப்பால் அடித்த வீர சகோதரனுக்கு எச்.ராஜா பொன்னாடை போர்த்தி பாராட்டு என்று படத்துடன் பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.