தமிழீழம் மலர்வது உறுதி!

0

தமிழீழம்  மலர்வது உறுதி! இதைத்தான் புலிகள் மீதான தனது தடையின் வழியில் வெளிப்படுத்திருக்கிறது இந்தியப் பேரரசு! 

2001 செப்டம்பர் 11 தாக்குதல் அமெரிக்க மற்றும் உலக பயங்கரவாத அரசுகளுக்கு சாதகமாக அமைந்த காலகட்டம். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி தனக்கு அடங்க மறுக்கும் நாடுகளை அரசுகளை போராடும் இயக்கங்களை மக்களை அழித்தொழிப்பு செய்தது. அமெரிக்க தலைமையிலான பயங்கரவாத எதிர்ப்பு கண்ணியில் இலவச இனைப்பாக இனைத்துக் கொள்ளப்பட்டது இந்தியா. 

இந்த கண்ணியில் 2009 யில் தமிழீழமும் புலிகளும் சிக்கிக் கொண்டு உலக ஒழுங்கின் பயங்கரவாதத்திற்கு இரையாகிப் போகினர். இலட்சக்கணக்கான மக்கள் பல்லாயிரம் போராளிகள் நூற்றுக்கணக்கான உயர் மட்ட தளபதிகள் என போராடும் தரப்பின் இராணுவக் கட்டமைப்பு முற்றாக உருக்குலைக்கப்பட்டது. 

விடுதலைப்புலிகளின் மேசைக்கு முன்னால் எத்தனையோ தீர்விற்கான திட்டங்கள் உலகின் சக்திவாய்ந்த அரசுகளால் நிறுவனங்களால் இராஐதந்திரிகளால் முன் வைக்கப்பட்ட நிலையில்  எதையும் ஏற்றுக் கொள்ளாமல் போரை தேர்வு செய்தனர். என்ன வகையிலான தீர்வு திட்டங்கள் முன் வைக்கப்பட்டிருக்கும் என்பதை எளிதாகவே யூகிக்க இயலும். இத்தீர்வு திட்டத்தை ஏற்றுக்கொள்வது ஒரு விடுதலைப் போரை சவக்குழிக்குள் அனுப்பும் அரசியல். 
உலக ஒழுங்கின் பயங்கரவாத நிகழ்ச்சி நிரலுக்குள் வரலாற்று இயக்கத்தை இழுத்து விடுவது. ஒரு போராட்டம் உயிர்ப்போடு இருக்கும்  போது தான் தனது அரசியல் வெற்றியை நோக்கி முன்னேற இயலும். 

உயிர்ப்போடு இருப்பதற்கான  எளிதான ஓரே வழி மரணத்தை நோக்கி முன்னேறுவது தான் புலிகளின் தலைமை இதைத்தான் செய்தது. இந்தியத்தின் தடை புலிகள் பற்றிய அச்சத்தை கடந்து ஒரு விடுதலைப் போராட்டம் பாரீய இழப்புகளுக்கும் அழிவுக்கும் பின்பும் உயிர்ப்புடன் இருப்பதைப் பற்றி தான். புலிகளின் அழிவுக்கு பின்பும் தடைக்கான காரணம் இதுவன்றி வேறல்ல!

பிரஞ்சு தத்துவியலாளர் ழான் போத்திரியாவின் வரிகளின் வழியில் சொல்ல வேண்டுமாயின் ஒடுக்கப்படடு அல்லலுறும்  மக்களுக்கு  மரணமே வாழ்வதற்கான ஓரே வழி.போராட்டத்தை தக்க வைக்கும் தரப்பினர் வெல்வது உறுதி!ஆகவே தான் சொல்கிறோம் ஈழம் அமைவது உறுதி என்று…

Leave A Reply

Your email address will not be published.