தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளாரா?

0


முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் முடிவில் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. ஆனால் இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தொடர்ந்தும் விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான பயமும் தலைவர் பிரபாகரன் மீது மீதான பயமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனை ஈழத்தில் அண்மையில் நடந்த சில சம்பவங்கள் மீண்டும் எடுத்துரைத்திருக்கிறது சிங்கள தேசம். 
சிங்கள தேசத்தை பொறுத்தவரையில் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய பெயரை உச்சரிக்காமல் அரசியலை செய்ய முடியாத நிலைமை காணப்படுகின்றது ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய மஹிந்த ராஜபக்ஷ தரப்பாக இருந்தாலும் சரி தலைவருடைய பெயரை உச்சரிக்காமல் புலிகளின் பெயரை உச்சரிக்காமல் அரசியல் செய்ய முடியாத நிலைமையே நிலவுகிறது.
இந்தச் சூழலிலேயே அண்மைய நாட்களில் நடைபெற்ற இரண்டு விடயங்களை நமது ஆசிரியர் தலையங்கம் சுட்டிக்காட்ட விரும்புகிறது ஒன்று முகப்புத்தகத்தில் தலைவர் பிரபாகரனின் உடைய புகைப்படங்களை தடை செய்கின்ற ஒரு முயற்சி நடைபெற்றுள்ளது மற்றையது தலைவர் பிரபாகரனின் உடைய புகைப்படங்களை வைத்திருந்ததாக கூறி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
இந்தியாவிலேயே தமிழகத்திலும் ஈழத்திலும் சுமார் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் தலைவர் பிரபாகரனுடைய புகைப்படங்களை முகநூலில் தங்களுடைய சுயவிபர புகைப்படங்களாக பகிர்ந்துள்ளார்கள் அத்துடன் தலைவரின் புகைப்படங்கள் முகநூல் அங்கும் பரவிக் காணப்படுகின்றது உண்மையில் இலங்கை அரசும் இந்திய அரசும் பிரபாகரன் அவர்களின் உடைய அந்த முகத்திற்கு மிகவும் அஞ்சுகின்ற ஒரு செயற்பாட்டை செய்திருக்கின்றது அதாவது இலங்கை புலனாய்வுப் பிரிவும் இந்திய புலனாய்வுப் பிரிவும் இணைந்து தலைவர் பிரபாகரன் என்னுடைய புகைப்படங்களை அகற்றும்படி ஒரு கோரிக்கையை பேஸ்புக் நிறுவனத்திடமும் வைத்திருக்கிறது.
இதன் அடிப்படையிலேயே முகப் புத்தக நிறுவனமும் தலைவர் பிரபாகரனின் உங்களுடைய புகைப்படங்களை வைத்திருக்கக்கூடியவர்களது கணக்குகளையும் அவருடைய புகைப்பட பதிவுகளையும் நீக்குகின்ற சில முயற்சிகளை உத்தியோகபூர்வமற்ற முறையில் முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது. உண்மையிலேயே இது தமிழ் மக்களை தமிழ் மக்களினுடைய விருப்பத்தை பாதிக்கின்ற ஒரு செயல் என்பதை முகநூல் நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும். உகெங்கும் உள்ள தமிழ் மக்கள்  முகநூல்களில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இந்த முகநூலை  நிராகரித்தால் அதாவது, தூக்கி எறிந்தால் முகநூலுக்கு தான் நட்டமே தவிர தமிழர்களுக்கு நட்டம் இல்லை.
ஏற்கனவே யூடியூப்பில் விடுதலைப்புலிகள் தொடர்பான புகைப்படங்கள் ஆவணங்கள் அளிக்கப்பட்டு வந்தன. ஈழத்தைப் பொறுத்தவரை சிங்கள ராணுவம் விடுதலைப் புலிகளைப் பற்றிய சின்னங்கள் நினைவுகள் எல்லாம் அளிக்கின்ற நினைவு அழிப்பை – இனவழிப்பை செய்து வருகின்றது. இந்தச் சூழலில் முகப்புத்தகத்திலும் இவ்வாறான முயற்சிகள் இடம் பெறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. அத்துடன் இவர்கள் அனைவரும் தலைவர் பிரபாகரனுடைய முகத்துக்கும் நினைவுக்கும் அஞ்சுகிறார்கள் என்பதே இதன் மூலம் அர்த்தப்படுகிறது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மாணவர் ஒன்றியத்தினர், பல்கலைக்கழகத்திலேயே தலைவர் பிரபாகரன் அவர்களுடைய புகைப்படத்தை மற்றும் மாவீரர்களுடைய புகைப்படத்தை வைத்திருப்பதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஐஎஸ் பயங்கரவாதிகளை தேடி அளிக்கின்ற முயற்சி என்ற அடிப்படையிலேதான் நாட்டில் தேடுதல்கள் கைதுகள் சோதனைகள் நடைபெறுகின்றன. 
இந்தச் சூழலில் விடுதலைப் புலிகள் சுதந்திர போராளிகள் அவர்கள் இவ்வாறான பயங்கரங்களை செய்யவில்லை என்று கூறிய இலங்கை அரச தரப்பினர்  -ஆளும் தரப்பினர் முதல் மகிந்த ராஜபக்ச தரப்பினர் வரை இவ்வாறு கூறியுள்ள நிலையில் ஏன் விடுதலைப்புலிகளின் உடைய படங்கள் இவர்கள் இப்போது அகற்ற வேண்டும் அல்லது அதை வைத்திருந்தவர்கள் மீது ஏன் இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக முஸ்லீம்கள்மீது ஒடுக்குமுறை என்ற பெயரில் தமிழ் மக்கள்மீது இராணுவப் பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்படுகிறதா? 
இலங்கையிலே 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் விடுதலைப் புலிகளை அதாவது மாவீரர் நாளை வெளிப்படையாக நினைவுகூர அனுமதிக்கப்பட்டது. மே மாதத்தில் நடைபெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நினைவுகூற அனுமதிக்கப்பட்டது. தற்போது இலங்கை அரசாங்கம் சர்வதேச ரீதியாக தனக்கு சாதகமான காய்நகர்த்தல்களை மேற்கொண்ட பின்னர் மாவீரர் நாளுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கும் எதிரான வகையில் காய்களை நகர்த்துகின்றதா? ஐஎஸ் பயங்கரவாதிகளின்  அட்டகாசங்களை சாட்டாக வைத்துக் கொண்டு தமிழர்களை ஒடுக்கின்ற வேலையை செய்கிறதா? மீண்டும் சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்கிறது. 
எனவே இவ்விரு சம்பவங்களின் ஊடாகவும் தலைவர் பிரபாகரனுடைய புகைப்படத்துக்கு இலங்கை அரசாங்கம் அரச படைகள் மிகவும் அஞ்சுகின்றன. தலைவர் பிரபாகரன் போரில் இறந்து விட்டதாக கூறிய இவ் அரசாங்கமும் படைகளும் ஏன் அவருடைய புகைப்படங்களுக்கு அஞ்சுகின்றன? அப்படியெனில் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளாரா? அரசினது இந்த நடவடிக்கைகளால் தமிழர்களுக்கு மாத்திரமல்ல சிங்களவர்களுக்கு மாத்திரமல்ல உலகத்தில் உள்ள அனைவருக்கும் இந்த கேள்விகள் எழும். சிங்கள அரசுதான் பதில் தர வேண்டும். 
எப்படி இருப்பினும், கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுவிக்க வேண்டும், எம் போராளிகளை நினைவு கூறுகின்ற உரிமையை சிங்களம் அனுமதிக்க வேண்டும். இன்றைய எமது போராட்டம் என்பது, சிங்களத்திடமிருந்து நீதியை பெறுவதுடன் எங்கள் போராளிகளை இம் மண்ணில் நிலை பெறச் செய்வதுமாய் இருக்க வேண்டும். 
நன்றி 
ஆசிரியர் ஈழம்நியூஸ்.06.05.2019

Leave A Reply

Your email address will not be published.