பள்ளிவாசல் தாக்குதலை தலைமைதாங்கிய ராணுவம்? சீ.சீ.டி.வி காணொளியில் அகப்பட்டது!!

0

நாத்தாண்டிய, இயலமோதர பள்ளிவாசல் நேற்றைய தினம் சிங்கள காடையர்களினது தாக்குதலுக்கு உள்ளானது.

காடையர்களின் தாக்குதலை சிறிலங்கா ராணுவத்தினரே தலைமைதாங்கிய நடத்தியதா என்கின்ற கேள்வி, பள்ளிவாயல் சீ.சீ.ரீ.வி காணொளிகளைப் பார்க்கின்ற பொழுது எழும்புகின்றது.

முதலாவது, பள்ளிவாயல் மீதான தாக்குதல்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த பொழுதே இடம்பெற்றிருக்கின்றது.

இரண்டாவது, குறிப்பிட்ட அந்த பள்ளிவாயல் சிறிலங்கா காவல்துறையின் பூரண பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையிலேயே தாக்கப்பட்டிருக்கின்றது.

மூன்றாவதாக, பதிவாகியுள்ள சீ.சீ.ரீ.வி. காணொளியில், ஆயுதம் தாங்கிய சீருடை தரித்த ஒரு இராணுவ வீரரே, காடையர்களை தாக்குதல் நடாத்த வரும்படியாக சைகை காண்பிப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.