பிரம்மாண்ட வசூலை குவித்த நடிகரின் படத்தில் இவரா? பலரையும் நம்பி ஏமாற வைத்த பிரபலம்!

0

யாஷ் நடிப்பில் KGF படத்தை பார்த்தவர்களின் மனதை விட்டு இன்னும் அதன் தாக்கம் போகவில்லை என்று தான் சொல்லவேண்டும். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

ரூ 80 கோடி பட்ஜெட் தொகையில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ 250 கோடிகளை அள்ளி வசூல் சாதனை படைத்தது. இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை முன்பை விட அதிகமான பட்ஜெட்டில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதில் யாஷின் கெட்டப் என ஒரு புகைப்படம் தற்போது வைரலாக பரவிவருகிறது. ஆனால் இதில் இருப்பவர் நடிகர் யாஷ் இல்லையாம். தீபக் ஷர்மா என்பவர் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள KGF படத்தின் புகைப்படம் என வெளியிட்டு பலரையும் நம்பவைத்துள்ளது தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.